[X] Close

சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.100 வரை அதிகரிப்பு: விலையைக் குறைக்க கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்


cement-price-up-to-rs-100-a-bundle

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:00 am
  • அ+ அ-

சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிமெண்ட்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டுவந்து விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.அய்யநாதன், தென்னிந்திய தலைவர் எல்.வெங்கடேசன், முன்னாள் தேசிய தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பது கட்டுமானத் துறையாகும். வீட்டு வசதி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்காற்றும் கட்டுமானத் தொழிலில் சிமெண்ட்டின் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சிமெண்ட் விலை கடந்த 10 நாட்களுக்குள் மூட்டை ஒன்றுக்கு அதிரடியாக ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 37 சதவீதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்களின் கூட்டு சதியே இந்த விலை உயர்வுக்குக் காரணம்.

மொத்த சிமெண்ட் உற்பத்தியில் வீடுகள் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 65 முதல் 67 சதவீதமும் அடிப்படைக் கட்டுமானத் துறையில் 18 முதல்20 சதவீதம் வரை சிமெண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் எதுவும் விலை உயராத நிலையில், சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

அரசு விற்கும் அம்மா சிமெண்ட் விற்பனையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையம்கட்டுமான தொழிலுக்கு ஒழுங்குமுறை ஆணையம் இருப்பது போல், சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு சிமெண்ட் விலையைஅத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்தக்கட்டமாக போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close