[X] Close

தமிழகத்துக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


hajj-travels-for-tamilnadu

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 08:55 am
  • அ+ அ-

தமிழகத்துக்கான ஹஜ் பயண ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கான ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு 3,534 இடங்கள் ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ்பயணம் மேற்கொள்ள ஏற்கெனவே 6,369 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே அதிகப்படியான விண்ணப்பங்கள் வரப்பெற்றிருப்பதை கருத்தில்கொண்டு தமிழக மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வசதியாகஹஜ் பயணத்துக்கு கூடுதலாக 1,500இடங்கள் ஒதுக்கீடு செய்யவும், தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் மத்திய சிறுபான்மையினர் நலஅமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவுபிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close