[X] Close

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 23 லட்சம் விவசாயிகள்: இந்த ஆண்டில் பதிவு பேரவையில் முதல்வர் தகவல்


  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 08:42 am
  • அ+ அ-

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, ‘‘கடந்த 2016-17ம் ஆண்டு பயிர்க் காப்பீடு திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிரிட்ட 3,700 பேருக்கு இதுவரை காப்பீட்டு தொகை வரவில்லை’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில், 2016-17ல் காப்பீட்டு நிறுவனத்தால் 17,610 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.11.25 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் 297 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38.40 லட்சமும் 2018 காரீப் பருவத்தில் 2,310 ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டு, 2,024 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும், 2016-17ம் ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களால் 12 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,527 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை 11.88 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,399 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், 11.70 லட்சம் விவசாயிளின் வங்கிக் கணக்கில் ரூ.3,370 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

2017-18-ல் காப்பீட்டு நிறுவனங்களால் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.1,128 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, 3.73 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.747 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 34 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் மேற்கொண்டுள்ள 23லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close