[X] Close

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி; பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இம்மாத இறுதிக்குள் செலுத்தப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல்


rs-2-000-special-package-for-those-under-poverty-line

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 08:18 am
  • அ+ அ-

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் இம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110-விதியின் கீழ், ‘வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும்’ என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:க.பொன்முடி(திமுக): வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி அறிவிப்பை தேர்தலைக் கருத்தில் கொண்டே முதல்வர் வெளியிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தது நிழல் பட்ஜெட், முதலமைச்சர் விதி 110-ல் அறிவித்ததுதான் நிஜ பட்ஜெட்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நாங்கள் நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்வதால்தான் 32 ஆண்டுகளுக்கு பின் தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சிக்கு வந்தோம். திமுக நிழல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததால்தான் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறது.

பொன்முடி: நிழல் பட்ஜெட் இல்லையென்றால், ரூ.2 ஆயிரம் நிதியுதவியை பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாமே?முதல்வர் பழனிசாமி: இது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் திட்டம். தொழிலாளிகள் காக்கப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்கள் இன்று வறட்சி மாவட்டங்களாக இருக்கின்றன. உங்கள் மாவட்டத் தில்கூட பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே, விவசாய தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் இல்லை.அதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் இன்றும் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல், வறுமையில் இருக்கின்றனர். அதையெல்லாம் ஆராய்ந்துதான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோமே தவிர தேர்தலுக்காக அல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்ற அத்தனை பேருக்கும் இந்த நிதி கொடுக்கப்படுகின்றது. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்த்து கொடுப்பதில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கும் உழைப்பாளிகளுக்கு, தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நிதி. இதை தவறு என்கிறீர்களா?பொன்முடி: ரூ.2 ஆயிரம் நிதியுதவி அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஆஸ்டின் (திமுக): ரூ.2 ஆயிரம் நிதியை, 2018-19ம் ஆண்டின் துணை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதாக கூறியுள்ளீர்கள். ஏற்கெனவே கடன் அதிகரித்துள்ள நிலையில், அதை இந்தாண்டில் சேர்த்திருக்கலாம்.

முதல்வர் பழனிசாமி: இது தொடர்பாக ஆஸ்டின் கவலைப்பட வேண்டாம். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான ரூ.2ஆயிரம் நிதி, இந்த மாத இறுதிக்குள் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

விரைவில் அரசாணை

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பட்டியல் அரசிடம் தயாராக உள்ளது. இதுதவிர, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பின ராக உள்ளவர்கள் பற்றிய விவரங்களை கணக்கெடுக்கும் பணி, வருவாய் துறை, தொழிலாளர் நலத் துறை சார்பில் தொடங்கப்பட் டுள்ளது. ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர் பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close