[X] Close

ட்விட்டரில் ஃபோட்டோ போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா


h-raja-shares-a-photo-and-mocks-sathyaraj

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Apr, 2018 14:22 pm
  • அ+ அ-

நடிகர் சத்யராஜை ட்விட்டரில் ஃபோட்டோ போட்டு கலாய்த்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. 

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற அந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய சத்யராஜ், "தமிழர்களின் உணர்வை மதியுங்கள், எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம் ராணுவம் வந்தாலுமே அஞ்சமாட்டோம். குரல் கொடுக்கத் தைரியம் இருப்பவர்கள் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள். இல்லையென்றால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்" என ஆவேசமாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணாசாலையில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில், போலீஸார் தடுப்பு வேலியை மீறி மைதானத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். 

தடியடி நடத்தப்பட்டபோது போராட்டக்காரர் ஒருவர் போலீஸாரை நோக்கி கைகூப்பி வேண்டும் காட்சி பதிவான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எச்.ராஜா, "இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்" என அதற்கு கேப்ஷன் போட்டிருக்கிறார்.

 

இது மறைமுகமாக சத்யராஜை கேலி செய்யும் வகையில் உள்ளது.

ரஜினி, தமிழிசை வழியில் எச்.ராஜ்..

மேலும், நேற்றைய போராட்டத்தின்போது காவலர்கள் மீது சிலர் நடத்திய தாக்குதலையும் எச்.ராஜா கண்டித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா, "சீருடையில் இருந்த காவலர்களை போராட்டக்காரர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இவர்களுடைய தலைமையின் பண்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரும் காவலர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் ரஜினிகாந்த் கருத்தை ஆதரித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close