[X] Close

கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் ‘டிக்டாக் செயலிக்கு’ தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி


  • முத்தலீப்
  • Posted: 12 Feb, 2019 15:39 pm
  • அ+ அ-

சமீப காலமாக ‘டிக்டாக்’ எனும் செயலி அனைவராலும் பகிரப்படுகிறது. அதில் சினிமா பாட்டுக்கு ஆடிப்பாடுவது, டப்ஸ்மாஸ் செய்வது, சினிமா வசனங்களை பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை டிக்டாக்கில் பதிவு செய்கின்றனர்.

டிக் டாக், இன்ஸ்டாகிராம், மியூசிக்கலி போன்ற செயலிகள் பலரது நேரத்தை ஆக்கிரமித்துள்ளன. குடும்பப் பெண்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் சினிமா பாடலுக்கு வாயசைத்தும், நடனம் ஆடியும் காணொலியை வெளியிடுகின்றனர்.

சிலர் டிக் டாக், மியூசிக்கலி ஆப் போன்றவற்றை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள் அதன் காரணமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. அவர்கள் வீடியோ மார்பிங் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த செயலியில் நேரத்தை கழிப்பவர்கள் அவர்களது கவனச்சிதறல் காரணமாக படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியை தழுவுகின்றனர். நாளுக்கு நாள் இச்செயலி ஆபாசத்தின் உச்சகட்டமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் ஆட்சேபித்து வரும் நிலையில் சட்டப்பேரவையிலும் இது இன்று எதிரொலித்தது.

சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துக்கொண்ட மஜக உறுப்பினர் தமீமுன் அன்சாரி இதுகுறித்து பேசினார். கலாச்சாரத்திற்கு சீரழிவு ஏற்படுத்தும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும், கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்குகிறது. இந்த டிக்டாக் செயலி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர், இளம்பெண்கள், குடும்பப்பெண்கள் அனைவரிடமும் பேசப்படுகிறது. அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆபாசத்தின் வடிவமாக வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாக பயன்படுத்துகின்றனர், இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித்தலைவர்களும் தடை செய்ய கோரிவருகின்றனர். இந்நிலையில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய டிக்டாக் செயலியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு  பதிலளித்த தமிழக தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணிகண்டன் டிக்டாக் செயலியை எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ப்ளூவேல் என்கிற விளையாட்டு பலரையும் பாதித்தபோது அதுகுறித்து பேசி அந்த சர்வர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து தடை செய்ய வைத்தோம். அதேபோன்று டிக்டாக் செயலியின் தலைமையிடத்தில் தொடர்புக்கொண்டு மத்திய அரசின் உதவியுடன் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close