[X] Close

அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பிப்பர்: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து


bjp-admk

தங்க தமிழ்ச்செல்வன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 11:56 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தால் மக்கள் மிகப்பெரிய பாடம் கற்பிப்பர் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டணம்காத்தானில் நேற்று நடை பெற்றது. அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து பேசினார்.

மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வரவேற்றார். இதில் தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்எல்ஏக்கள் எஸ்.முத்தையா (பரமக்குடி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), அமைப்புச் செயலாளர்கள் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.இன்பத்தமிழன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட அமமுக அலுவலகத்தை தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசு எந்த நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் வேண்டாம் என்ற சொன்ன உதய் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை தற்போதைய அதிமுக அரசை மிரட்டிக் கொண்டு வந்தனர். அதிமுக அமைச்சர்கள் மடி யில் கனம் இருப்பதால் பாஜக அரசை கண்டு பயப்படுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்தால், மக்கள் மிகப்பெரிய பாடம் கற்பிப்பர். தமிழக பட்ஜெட்டில் ரூ. 4 லட்சம் கோடி கடன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 48,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் எந்த வளர்ச்சிப் பணியும் செய்யவில்லை. பொங்கலுக்கு குடும்பத்துக்கு ரூ.1000 வீதம் ரூ.2,500 கோடி செலவிட்டுள்ளனர். இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close