[X] Close

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


kumbhabhishekham

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் ராஜகோபுர வாசலில் திரண்டிருந்த பக்தர்கள்.

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:14 am
  • அ+ அ-

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில் சுற்றுக் கோயில்களுக்கு கடந்தஜன. 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் ராஜகோபுரங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா தீபாராதனை

இதையொட்டி, நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நேற்று காலை நிறைவு பெற்றதையடுத்து, கடங்கள் புறப்பாடு நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.20 மணிக்குபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர், நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகளுக்கும், சுவர்ண கணபதி முதலான பரிவார மூர்த்திகளுக்கும், ராஜகோபுரம் உள்ளிட்ட 3 கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சன்னதிகளில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதில், புதுச்சேரி முதல்வர்வி.நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எம்.கந்தசாமி, துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், நிர்வாக அலுவலருமான (கோயில்கள்) ஏ.விக்ரந்த் ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.சுதாகர், தமிழகம், புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close