[X] Close

15 ஆண்டுகளுக்குப் பின் திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் பயன்பாடு: ரூ.23 கோடியில் 7 லட்சம் கிலோ விற்பனை


tirupathi-laddu

திருப்பதி லட்டு - கோப்புப் படம்

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 12 Feb, 2019 09:58 am
  • அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்காக 15 ஆண்டுகளுக்குப் பின் ரூ.23 கோடிமதிப்பில் 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய் வழங்க ஆவின் நிறுவனம் ஒப்புதல் வழங்கிஉள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆவின் நிறுவனம் தற்போது தினசரி 32 லட்சம் லிட்டர் பாலை,கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. தினசரி 23 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள பாலை உபபொருட்களாகத் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

மேலும், வெளி மாநில ஆவின் கிளைகளிலும், அரசு மற்றும் அரசு சார் நிறுவன டெண்டர்களிலும் பங்கு பெற்று நெய், வெண்ணெய் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்களுக்குப் பயன்படும் நோக்கில், 6 மாதம் வரை கெடாத, உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் நெய், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு ‘ஆவின்’ நெய், விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய்யை ரூ.23 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ‘ஆவின்’சேலம் - ஈரோடு ஒன்றியங்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்றது.

தற்போது, நெய்யின் தரம்மற்றும் விலையின் அடிப்படையில் ‘ஆவின்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2003-04-ம் ஆண்டுஅதாவது, 15 ஆண்டுகளுக்குப் பின், தற்போது ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close