[X] Close

எந்த கட்சி ஆண்டாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தல்


thiruvalluvar

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:56 am
  • அ+ அ-

எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியது:

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை, கடலின் உப்புக் காற்றில் இருந்து பாதுகாக்க ஆண்டுக்கு ஒருமுறை சிலைக்குவேதிப்பொருள் பூசி சிலை பாதுகாக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படவில்லை.

திருவள்ளுவர் சிலைப் பராமரிப்புக்காக தமிழக அரசு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எவ்விதப் பராமரிப்புப் பணியும் தொடங்கவில்லை. வள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் மண்டபத்துக்குச் சேர்த்து படகு போக்குவரத்துக்காக கட்டணம் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. தற்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும்தான் படகுப் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குப் பாலம் கட்டவும் அல்லது காந்தி மண்டபத்தில் இருந்து வள்ளுவர் சிலைக்குப் பாலம் கட்டவும் வைக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும் என கூறிய நீதிபதிகள், அரசிடம் உரிய விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close