[X] Close

டாஸ்மாக் கடையில் அதிகாலை 6 மணிக்கே மது விற்பனை நடக்கிறது


anakaputhuru-tasmac

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:41 am
  • அ+ அ-

சென்னை அனகாபுத்தூர் டாஸ்மாக் கடையில் காலை 6 மணியிலிருந்தே மதுபானம் விற்கப்படுவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்புகொண்டு அனகாபுத்தூரைச் சேர்ந்த வாசகர் ஆர்.ரமேஷ்பாபு கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, கடை திறக்கும் நேரத்தை பகல் 12 மணி என அறிவித்தது. இதன் படி, கடைகள் தற்போது 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலான இடங்களில் மறைமுகமாக காலை 6 மணி முதலே விற்பனை தொடங்கி விடுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் காலை 6 மணிக்கே மதுபான விற்பனை அமோகமாக நடக்கிறது.

18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் மதுபானம் வாங்கி செல்கின்றனர். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விற்பனை தொடர்கிறது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஊழியர்கள் மீது நடவடிக்கை

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘‘புகார் வரும் இடங்களில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close