[X] Close

மாரடைப்பால் உயிரிழக்கும் தருவாயில் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்த ஓட்டுநர்


poonthamalle-bus-incident

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:36 am
  • அ+ அ-

பூந்தமல்லி அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் 50-க்கும் மேற்பட்ட பயணி கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர், திருப் பத்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த நெற்குன்றம் அருகே ஓட்டுநர் ரமேஷூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். அதன்பிறகு அவர் அப்படியே இருக் கையில் சரிந்து விழுந்தார். இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, நடத்துநர் உட்பட சில பயணிகள், ஓட்டுநரை மீட்டு ஆட்டோ மூலம் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோ தனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கெனவே ரமேஷ் உயிரிழந்து விட்ட தாக தெரிவித்தனர்.

இதையறிந்த பயணிகள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாரடைப்பு ஏற்பட்டதும் ஓட்டுநர் பேருந்தை சாலை யோரத்தில் நிறுத்தியதால், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விரைந்து வந்து ஓட்டுநருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாற்று ஓட்டுநரை கொண்டு பயணிகள் அனைவரும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close