[X] Close

தூத்துக்குடி விமான நிலைய வாக்குவாத சம்பவம்; வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி முறையீடு: தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


tuticorin-airport

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:32 am
  • அ+ அ-

தூத்துக்குடி விமான நிலைய வாக்குவாதம் சம்பவம் தொடர்பான தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவி லூயிஸ் ஷோபியா தொடர்ந்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கனடாவில் உள்ள மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் கடந்த செப் 3-ம் தேதி பயணித்தேன். என்னுடன் அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்துத் தெரிவித்தேன். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்துறையினர் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதில், மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது லூயிஸ் சோபியா மீதான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சேஷாயி, லூயிஸ் சோபியா மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து, இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close