[X] Close

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்


gkvasan-interview

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:28 am
  • அ+ அ-

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அரியலூரில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணியை இறுதிசெய்யவில்லை. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டுவருகிறேன்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்ற எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவரவர் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அறிவிப்பு வெளியிடுவார்கள். அதுபோலவே நாங்களும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்.

தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இயற்கையால் வஞ்சிக்கப்படுகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.

அதிமுக 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். சட்டத்துக்கு உட்பட்ட பிரச்சினைகளை முறையாக, தகுந்த நேரத்தில் அணுக வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close