[X] Close

பிரதமரின் குமரி வருகை தள்ளிவைப்பு


kanyakumar-plan-for-modi

பிரதமர் நரேந்திர மோடி

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:26 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி பயணத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, அரசியல் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். ஏற்கெனவே, மதுரை, திருப்பூரில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். வரும் 19-ம் தேதி கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அரசு நிகழ்ச்சிக்கு, கட்சிக் கூட்டத்துக்கு என தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டன. தற்போது, தேதி அறிவிக்கப்படாமல் பிரதமரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இவ்விழா நடைபெறலாம் என உளவுப்பிரிவினருக்கு தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பாஜக வசமுள்ள ஒரே தொகுதி கன்னியாகுமரி. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேளையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றால் கூடுதலாக பலனளிக்கும் என்பதால், பிரதமரின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close