[X] Close

உட்கட்சி பூசல்கள் சரிசெய்யப்படும்: கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்


ksazhagiri-speech

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:21 am
  • அ+ அ-

காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் சரிசெய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடன் தள்ளுபடி விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று கூறியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க மோடி எந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்?

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு, தேர்தலை கருத்தில்கொண்டு ரேஷன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாயை பொங்கலின்போது வழங்கினர். அதேபோல பாஜகவும் தேர்தலை கருத்தில்கொண்டே விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரூ.6 ஆயிரம் கொடுத்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?தொடக்கத்தில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகப் பேசிவந்த கமல்ஹாசன், தற்போது திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அவரது செயல், பாஜக.வுக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close