[X] Close

யாருடன் கூட்டணி என்பது இதுவரை முடிவாகவில்லை: பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்


coalition-with-whom-it-has-not-yet-come-to-an-end

பொள்ளாச்சி ஜெயராமன்.

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 13:46 pm
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது இதுவரை முடிவாகவில்லை என்று சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது இதுவரை முடிவாகவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும், ஜெயலலிதாவின் சித்தாந்தத்தை, கொள்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் நிச்சயமாக கூட்டணி அமைக்கப்படும். எனினும், சில நேரங்களில்கட்சியின் நலனுக்காக, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும்.

மக்களவைத் தேர்தலில் மக்களை சந்தித்து, அவர்களது ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெறுவோம். அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம். திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது, மக்களின் குறைகளைக் கேட்கும் கூட்டம் நடத்தவில்லை. எந்த அதிகாரமும்இல்லாமல், மக்களிடம் குறைகளைக் கேட்கும் கூட்டம் நடத்துவதாகக் கூறி, குழப்பம் விளைவிக்கிறார். நாங்கள் (அதிமுக) கிராம சபைக் கூட்டம் நடத்தினால், மக்களின் குறைகளைத் தீர்க்க முடியும். அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யும் அதிகாரம் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close