[X] Close

இந்திராவின் முகவரியாக பிரியங்கா உள்ளார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு


priyanka-is-indira-s-address

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 13:11 pm
  • அ+ அ-

குமாரபாளையம் அருகே கல்லாங்காட்டுவலசில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் வட்டார தலைவர் அல்லிமுத்து தலைமை வகித்தார்.

விழாவில் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்வது பெண்கள். இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிக அளவில் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக பிரதமர் மோடி சொன்னார். ஆனால் செய்யவில்லை. மோடி உள்பட பாஜக வினரையும், அதிமுகவினரையும் தோற்கடிக்க வேண்டும். சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார். அதிமுக வினர் எப்போது போவார்கள் என்பது தெரியவில்லை.

இந்திராவின் முகவரியாக இன்னொரு இந்திரா காந்தியாக பிரியங்கா வந்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவரை ஜனங்களை பார்த்து பேச வாய்ப்பில்லாமல் போனது. இனி என் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும். பிரியங்காவை ஈரோடு அழைத்து வர முயற்சி செய்வேன், என்றார்.

தொடர்ந்து கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இல.கணேசன் கூறுவது போல் பாஜகவைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் தான் எங்களைகண்டு அஞ்சுகின்றனர். கமல் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், என்றார்.

முன்னதாக கட்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் தனகோபாலன், மாநில பொருளாளர் ராமச்சந்திரன், தாராபுரம் எம்எல்ஏ காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close