[X] Close

பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்?- தாராபுரத்தில் உறவினர்கள் மறியல்


the-school-student-is-mystery-in-death

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 12:44 pm
  • அ+ அ-

தாராபுரத்தில் பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் முருங்கம்பாளையம் சக்தி மளிகை வீதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் நவ்யா (15). தாராபுரம் - உடுமலை சாலையிலுள்ள மகளிர் விடுதியில் தங்கி, அதே வளாகத்திலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் அவரது தங்கையுடன் விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் நவ்யாவும், விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளும் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியம் சாப்பிட மீண்டும் விடுதிக்கு சென்றனர். உணவருந்திவிட்டு அனைவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஆனால், மாணவி நவ்யா அங்குள்ள கம்யூட்டர் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், அங்கிருந்து புறவழிச் சாலையிலும், பின்னர் அமராவதி ரவுண்டானாவிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, போலீஸாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் திருப்பூரில் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாணவியின் உறவினர்கள் கூறும்போது, ‘எங்கள் பிள்ளை தற்கொலை செய்ய எந்த காரணமும் இல்லை. அவளது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close