[X] Close

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர்: திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சு


dindigul-seenivasan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Feb, 2019 11:18 am
  • அ+ அ-

பொதுக்கூட்ட மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்திகளில் இடம் பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் "மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர்" என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் நடந்த இந்த விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  "தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால்  கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்.

உண்மையில் தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டுமே 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

"எம்.ஜி.ஆர். எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ஆட்சிக்கு முன்னால் இருந்த ஆட்சியை குறை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்" என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க, கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்க, 'இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசுகையில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பசுமாடு வீதம் 500 விலையில்லா பசுமாடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பேசுவதற்குப் பதிலாக ஒரு பசுமாட்டுக்கு ரூ.500 வீதம் விலையில்லா பசுமாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று பேசினார்.

விழா மேடையில் அவர் இவ்வாறு தவறாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close