[X] Close

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு


the-scheme-announced-by-the-central-government-budget

கோப்புப் படம் - KSL

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 10:51 am
  • அ+ அ-

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டபடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், ‘2 ஹெக்டேர் நிலப்பரப்புக்குக் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். இந்த நிதி உதவி அனைத்தும் மத்திய அரசால் மட்டும் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்’ என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. வருகிற மார்ச் 31-ம்தேதி வரை கணக்கிடப்பட்டு முதல்தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். உதவித்தொகையை பெறுவதற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் வைத்திருக்க வேண்டும்.

இதற்கான பயனாளிகளை தேர்வுசெய்யும் பணியில் வருவாய் மற்றும்வேளாண்மைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கிராம நிர்வாகஅலுவலர்களும் இந்த கணக்கெடுப்பைநடத்துகிறார்கள். இதற்காக தனி விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விவரங்கள் சரிதானா என்பதை கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் உறுதி செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில்சுமார் 75 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர்சத்யகோபால் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் தலைமைச் செயலக ஒருங்கிணைப்பு அதிகாரியாக ககன்தீப் சிங் பேடியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் டி.ஜெகநாதன், எஸ்.நாகராஜன், பி.மதுசூதன், எம்.லட்சுமி,ஜெ.மேகநாத ரெட்டி, வி.தட்சிணாமூர்த்தி, கே.பாஸ்கரன், என்.சுப்பையன், ஆர்.பழனிசாமி, என்.வெங்கடாசலம், தேசிய தகவல் மைய தொழில்நுட்ப இயக்குநர் கே.ஸ்ரீனிவாச ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close