[X] Close

கூட்டணி குறித்த இறுதி முடிவை ஸ்டாலின்தான் எடுப்பார்: முத்தரசன்


stalin-will-take-the-final-decision-on-the-coalition

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 10:41 am
  • அ+ அ-

கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின்தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிவந்தாலும், அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் குறித்து திமுக பொருளாளர் விமர்சனம் செய்வதாக தகவல் வந்தது. ஆனால், எங்களை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளன.

கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின்தான். தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை பேசவில்லை. திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கமல்ஹாசன் கூறிய பிறகும், அவரிடம் கூட்டணியில் சேர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி கூறியது ஏன் என்று தெரியவில்லை. இயற்கை பேரிடரின்போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close