[X] Close

பணமதிப்பு, ஜிஎஸ்டி மூலம் தொழில்களை நசுக்கியது யார்?- பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி


p-chidambaram

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 10:09 am
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் தொழில்களை நசுக்கியது யார் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழா, திருப்பூர், சென்னையில் இஎஸ்ஐ மருத்துவ மனை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் வந்தார்.

இதையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி என்பது அடிப்படையில் நல்ல கொள்கை. அதை கோமாளித்தனமாக அமல்படுத்தி அந்தச் சட்டத்தை பொல்லாத சட்டமாக மாற்றியது யார்?

பணமதிப்பு நீக்கம், கோமாளித் தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகிய வற்றை கொண்டுவந்த மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ? இவ்வாறு ப.சிதம்பரம் ட்விட் டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close