[X] Close
 

ஐபிஎல் அப்டேட்: சேப்பாக்கம் மைதானத்துக்குள் செருப்பு வீச்சு


hoe-thrown-at-ground-from-galleries-at-m-a-c-stadium-in-chepauk-during-csk-vs-kkr-match

  • பாரதி
  • Posted: 10 Apr, 2018 21:13 pm
  • அ+ அ-

சேப்பாக்கம் மைதானத்துக்குள் அரங்கிலிருந்த ஒருவர் ஷூவை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தொடங்கியது. பலத்த சோதனைகளுக்குப் பிறகே பார்வையாளர்கள் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், மைதானத்துக்குள் வந்த அனைவருக்கும் சிஎஸ்கே அணியின் டிஷர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் மைதானம் இருக்கிறது.

பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி, திடீரென மைதானத்துக்குள் ஒருவர் ஷூவை கழற்றி வீசி அறிய அது மைதானத்தில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா அருகே வந்து விழுந்தது. இதனால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close