[X] Close

ஐபிஎல் அப்டேட்: பாரதிராஜா, சீமான் கைது; வாலாஜா சாலையில் கடைகள் மூடல்


ipl-update-bharathiraja-arrested

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Apr, 2018 19:02 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குநர் அமீர், எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டியை எதிர்த்து இன்று சாலை மறியல், சேப்பாக்கம் மைதானம் முற்றுகை எனப் பலவிதப் போராட்டம் நடந்துவருகிறது.

இந்நிலையில், சென்னை வாலாஜா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ., கருணாஸ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் வாலாஜா சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், வாலாஜா சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.

கொல்கத்தா அணியினரும் வந்தனர்..
இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தடைந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் அவர்களுக்கு சிஎஸ்கே டி ஷர்ட் வழங்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close