[X] Close

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் கொலையில் மேலும் 3 பேர் கைது


pmk-murder

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:18 am
  • அ+ அ-

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பாமக பிரமுகர்ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரைபோலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக முன்னாள் நகரச் செயலாளரான வ.ராமலிங்கம்(45), கடந்த 5-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலரால் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் ஷியாம் சுந்தர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வரும் திருவிடைமருதூர் போலீஸார் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருமங்கலகுடியைச் சேர்ந்த முகமது தவ்பீக்(29), முகமது பர்வீஸ்(26), ஆவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா(26)ஆகியோரை திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close