[X] Close

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன: வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் தகவல்


mobile-accidents

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:15 am
  • அ+ அ-

செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4-ம் தேதி முதல் வரும் 10-ம் தேதி வரையில் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அமிர்த வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு, சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சாலைகளில் எப்போது பயணித்தாலும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி நடிகர் மயில்சாமி பேசினார்.

சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பேச்சு பேட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆர்டிஓ எம்.ஸ்ரீதரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர்,அவர் பேசும்போது, “மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட், காரில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 35 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, எந்த வாகனங்களை ஓட்டிச் சென்றாலும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மோட்டார்வாகன ஆய்வாளர் வி.அருணாச் சலம், பள்ளி தாளாளர் சுபாஷினி மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close