[X] Close

20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகை கண்டு ரசித்த மனநோயாளிகள்: மாமல்லபுர சிற்பங்களை குதூகலத்துடன் பார்வையிட்டனர்


20-years-physically-challenged

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:42 am
  • அ+ அ-

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருக்கும் மனநோயாளிகள் 90 பேர் மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலாவாக அழைத்து வரப்பட்டனர். கோயில்சிற்பங்களை அவர்கள் குதூகலத்துடன் கண்டு ரசித்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஏராளமான மனநோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சில குடும்ப உறுப்பினர்கள்கூட பாரமாகக் கருதுவதால் பலர் வருடக் கணக்கில் அங்கேயே தங்கியுள்ளனர். இளம் வயது முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் இதே நிலையில் குடும்ப உறவுகளின் ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ளனர். இதில் சிலர் வயது முதிர்வின் காரணமாக வெளி உலகையே பார்க்காமல் காப்பகத்திலேயே இறந்து விடுவதும் உண்டு.

இவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, வெளி உலகை பார்த்து ரசிக்கும் வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்தது. அதன்படி உரிய அனுமதி பெற்று 20 ஆண்டுக்கும் மேலாக காப்பகத்தில் இருக்கும் 90 பேர் இந்தச் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களது சீருடைகள் அகற்றப்பட்டு, சாதாரண உடைகள் அணிவிக்கப்பட்டு மாமல்லபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பாதுகாப்புக்காக காப்பக செவிலியர்கள், பாதுகாவலர்களும் உடன் வந்தனர்.

மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், குதூ கலத்துடன் ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் இவர்களை உற்சாகப் படுத்தினர். பலர் இவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண் டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக வெளி உலகையே பார்க்காமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு இருந்த நிலையில் கடற்கரை கோயில், ஐந்து ரதம் மற்றும் கடற்கரை பகுதிகளைப் பார்த்த அவர்களின் முகத்தில் ஒருவித பூரிப்பையும், குதூகலத்தையும் காண முடிந்தது.

பின்னர் மாலையில் காப்பகத்துக்கு மீண்டும் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close