[X] Close

தமிழகம், புதுவையில் சில தினங்களுக்கு மழை


tamilnadu-rain

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:41 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மாலத்தீவு முதல் ஆந்திர மாநிலம் வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது குமரிக் கடல் முதல் கடலோர ஆந்திர பிரதேசம் வரை, தமிழகத்தின் உள் பகுதி வழியாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்று வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close