[X] Close

முழுமையடைந்தது மெட்ரோ ரயில்: வண்ணாரப்பேட்டை- பரங்கிமலை சேவை நாளை துவக்கம்: முதல் நாள் இலவசம்


metro-rail

  • முத்தலீப்
  • Posted: 09 Feb, 2019 16:07 pm
  • அ+ அ-

வரையிலான பணிகளும் நிறைவுப்பெற்றதால் நாளை பொதுமக்கள் சேவைக்காக தொடங்க உள்ளது. முதல் நாள் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்.

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்க திட்ட அறிக்கை 2007-08-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவக்கப்பட்டது.

இரண்டு தொகுப்புகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் துவங்கியது. முதல் தொகுப்பு வண்ணாரப்பேட்டையில் தொடங்கி விமான நிலையத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 23.085 கி.மீ (இதில் 14.3 கி.மீ தரைக்கடியில் செல்கிறது)

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விபரம்:

வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்.

இரண்டாவது தொகுப்பு சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலையில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 21.961 கி.மீ (இதில் 9.7 கி.மீ தரைக்கடியில் செல்கிறது)

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விபரம்:

சென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - ஷெனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - ஈக்காட்டுத்தாங்கல் - ஆலந்தூர் - பரங்கி மலை.

இந்நிலையில் டிஎம்எஸ் முதல் விமான நிலையம்வரை பணிகள் முடிந்து ஏற்கெனவே இயங்கி வருகிறது. அதேபோன்று வேப்பேரி முதல் பரங்கிமலை வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 10 கிமீ பணியும் நிறைவுப்பெற்றது.

இதையடுத்து வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம்வரை பயணம் செய்யலாம். அனைத்து வழித்தடங்களும் தயாரான நிலையில் இதற்கான சேவையை திருப்பூர் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி காட்சிமூலம் நாளை மாலை 3.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதையொட்டி நாளை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று கட்டணம் அதிகம் என்று பொதுமக்கள் கூறியதால் மொத்தக்கட்டணம் 70 ரூபாயிலிருந்து ரூ.10 குறைத்து ரூ.60 ஆக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close