[X] Close

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை வழக்கு


  • முத்தலீப்
  • Posted: 09 Feb, 2019 15:14 pm
  • அ+ அ-

அப்போலோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் தொடர்ந்துள்ள வழக்கில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை காண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

 ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிப்பதாகவும், ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தை புரிந்து பதிவு செய்து கொள்ள 21 துறைகளை சார்ந்த மருத்துவர்களை கொண்ட குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவையும் ஆணையம் நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

அரசு மருத்துபர்களை குறுக்கு விசாரணை செய்ய தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் மருத்துவர்கள், பணியாளர்களை ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தை கருத்தில் கொள்ளாமல் காக்க வைப்பதும், ஆணையமே விசாரானையை ஒத்திவைப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடைவிதிக்கவும் அப்போலோ கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக பொதுத்துறை, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு வரும் பிப்.11 திங்கட்கிழமை நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடைவிதிக்கவும் கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close