[X] Close

திமுக கூட்டணியில் கமல்? -கே.எஸ்.அழகிரி அழைப்பு


kamal-dmk-ksazhagiri

கமல்ஹாசன்

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Feb, 2019 11:53 am
  • அ+ அ-

திமுக கூட்டணியில் கமல் இணையவேண்டும். அப்படி இணைந்தால் எங்கள் கூட்டணி மேலும் பலம்பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கமலுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

புதிதாகப் பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா காந்தி, இந்த மாதத்தில் தமிழகம் வருகிறார். பரப்புரையில் கலந்துகொள்கிறார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்துக்கு இரண்டுமுறை வருவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவேண்டும் என்று சென்னையில் பேசினேன். இப்போதும் இதையே வலியுறுத்துகிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணையவேண்டும். மதச்சார்பற்ற கூட்டணி இது. அதேபோல், கமல்ஹாசனும் மதச்சார்பற்ற கூட்டணியைத்தான் விரும்புகிறார். எனவே திமுக, காங்கிரஸ் கட்சிகள் இணைந்திருக்கிற கூட்டணியில், கமல்ஹாசனும் இணையவேண்டும்.

அப்படி இணைந்தால், எங்கள் கூட்டணி மேலும் பலமாகும் என்பது உறுதி.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close