[X] Close

ஆளுநர் கையெழுத்திடும் வரை 7 பேர் விடுதலைக்கான என் பயணம் தொடரும்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உறுதி


governor

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:47 am
  • அ+ அ-

எழுவர் விடுதலைக்காக தமிழக ஆளுநர் கையெழுத்திடும் வரை மக்களைச் சந்திக்கும் என் பயணம் தொடரும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் மாவட்டந்தோறும் மக்கள் சந்திப்பு நடத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் நேற்றுநடைபெற்ற மக்கள் சந்திப்புநிகழ்ச்சியில் பங்கேற்ற அற்புதம்மாள், செய்தியாளர்களிடம் கூறியதாவது:குற்றவாளிகள் தங்களது தண்டனைக் காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டவைதான் சிறைச்சாலைகள். அவர்களை சித்திரவதை செய்வதற்காக அல்ல.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சட்டத்தின்பால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக 7 பேர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதேசட்டத்தின்பால் பணியாற்றும் தமிழக ஆளுநர், சட்டத்தை மதித்து ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் எனக் கருதப்படும் 7 பேரையும் விடுதலை செய்ய உடனே கையெழுத்திட வேண்டும்.

ஆளுநர் கையெழுத்திடும் வரை மக்களைச் சந்திக்கும் என் பயணம் தொடரும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close