[X] Close

எந்த கட்சியுடனும் கூட்டணி அமையவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


no-coalition-with-any-party

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:20 am
  • அ+ அ-

எந்தக் கட்சியுடனும் இதுவரை கூட்டணி அமையவில்லை என்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள்,வெற்றி தோல்வி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்க, மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை ஏற்பாடு செய்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி 6.15 வரை நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தனர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாகொண்டாட்டம், தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபற்றி அமைச்சர்டி.ஜெயக்குமார் கூறியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டாட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் தெரிவித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்ததினம் கொண்டாடப்படும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கட்சியினரின் பணிகள்ஏற்கெனவே முடுக்கி விடப்பட்டுள் ளன. ‘நாற்பதும் நமதே’ என்பது ஜெயலலிதாவின் முழக்கம், இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசப்பட்டதா?கூட்டணி குறித்து இன்று பேசவில்லை. கற்பனையாகவே பல கதைகள் புனையப்படுகின்றன. எந்தக் கட்சி வந்தாலும் அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். தற்போது வரை எந்தக் கூட்டணியும் அமையவில்லை. அமைந்தால் அதுமெகா கூட்டணியாக இருக்கும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட வுடன் கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும். தனித்து போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறதே?அதிமுக கட்டுக்கோப்பானஇயக்கம். ஜெயலலிதா இருக்கும்போது நடந்துகொண்டதுபோல, தற்போதும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

கூட்டணி குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?அதற்கான அவசியம் எழவில்லை. கட்சி எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படும்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close