[X] Close

ரூ.10 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்க திட்டம்


the-plan-to-provide-rs-10-000-crore-crops

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:16 am
  • அ+ அ-

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் வரும் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பயிர்கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் ரூ.50 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதேபோல், விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.199 கோடியும், தீவன அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.25 கோடியும், அசீல் இன நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நடப்பு ஆண்டில் பால் உற்பத்தி கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.237 கோடி மதிப்பீட்டில் 3 திட்டங்களை செயல்படுத்த திட்ட ஆய்வுக்குழு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டப்பணிகள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் தொடங்கப்படும். இதுதவிர வரும் ஆண்டில் பால் பதப்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மரபுத்திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடியில் புதியஉறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். பட்ஜெட்டில்கால்நடை பராமரிப்புத் துறைக்குரூ,1,252 கோடியும், பால்வளத்துறைக்கு ரூ.258 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close