[X] Close

ஜிஎஸ்டி, 14-வது நிதிக்குழு பரிந்துரை அமல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரிப்பு: தமிழக பட்ஜெட்டில் தகவல்


gst

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:05 am
  • அ+ அ-

ஜிஎஸ்டி வரி மற்றும் 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரித் துள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:நிதி ஆதாரங்களைப் பெருக்க திறன்மிகுவரி நிர்வாக அமைப்பு அவசியம். இதை உணர்ந்து, மாநிலத்தின் நிதி மேலாண்மையை மேம்படுத்த மின் ஆளுமை முயற்சி களை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநில கருவூலத் துறையின் நடவடிக்கைகளை மனிதவள தரவுகளுடனும், வரவு செலவு திட்டத்துடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்த நாட்டிலேயே முதல் முறையாக ‘ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி கடந்த ஜனவரி 10-ம் தேதி தொடங்கிவைத்த இத்திட்டம், வரும் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் கணினி வழியில் செயல் படுத்தப்படும்.

வரி செலுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வணிக வரித் துறையால் செயல்படுத்தப்படும் ‘முழுமையான தீர்வுத் திட்டம்’ உறுதி செய்யும்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் மாநிலங்களின் வரி விதிப்பு அதிகாரங்கள் குறைந்து, வரி வருவாய் ஈட்டும் திறனும் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, இணையத்தில் படிவங்களை தாக்கல் செய்வதில் நிலவும் சிக்கல், ஜிஎஸ்டியில் மாநில அரசின் பங்கு மற்றும் இழப்பீட்டை வழங்குவதில் மத்திய அரசு காட்டும் தாமதம் ஆகியவை தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன.

14-வது நிதிக்குழு காலத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு 32-ல் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு 9-வது நிதிக்குழு பரிந்துரையான 7.931 சதவீதத்தில் இருந்து 14-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.023 சதவீதமாக குறைந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் 14-வது நிதிக்குழு நடுநிலையான, நியாயமான பரிந் துரைகளை மத்திய அரசுக்கு அளிக்கும். அதன்மூலம், கடந்த காலங்களில் தமிழகத்துக்கு இழைக் கப்பட்ட அநீதி சரிசெய்யப்படும் என்று மாநில அரசு நம்பிக்கையுடன் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 2018-19-ல் ரூ.30 ஆயிரத்து 638 கோடியே 87 லட்சமாகவும், 2019-20-ல் ரூ.33 ஆயிரத்து 978 கோடியே 47 லட்சமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பிறகு, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 2019-20-ல் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.25 ஆயிரத்து 602 கோடியே 74 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close