[X] Close
 

உங்களுக்குத் தெரியுமா?- இன்றைய ஐபிஎல் போட்டிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு


four-tier-security-for-todays-ipl-match

  • பாரதி
  • Posted: 10 Apr, 2018 12:12 pm
  • அ+ அ-

இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குவதற்கு. ஆனால், நேற்றிரவே சென்னை காவல்துறை போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பிஆர்எல் எனப்படும் பப்ளிக் ரிசார்ட் லைசன்ஸ் வழங்கிவிட்டனர்.

அத்துடன் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது. 

ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர் தனியார் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுதவிர சில கிரிக்கெட் ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
உளவுத்துறையும் தன் பங்குக்கு கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுபவர்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 

இன்று போராட்டம் அறிவித்துள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதிகளில் அதிதீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த விடுதிகளுக்குள் அவ்வளவு எளிதாக யாரும் வந்துசெல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று மாலையே வெடிகுண்டு நிபுணர்கள் தங்கள் சோதனைப் பணிகளை மேற்கொண்டனர்.

கருப்புச் சட்டைக்கு அனுமதி உண்டா?
ஐபிஎல் போட்டிக்கு கருப்புச் சட்டையுடன் வரும் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக போலீஸார் ஏதும் உறுதியாக தெரிவிக்காத நிலையில் ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்கள் கருப்புச் சட்டை, டி ஷர்ட்டுக்கு தடை விதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close