[X] Close

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- மின்துறை அலுவலகம் முற்றுகைபழைய மின்சாதன பொருட்களை வாயிலில் உடைத்து போராட்டம்


puduchery-protest-against-eb

  • kamadenu
  • Posted: 07 Apr, 2018 10:05 am
  • அ+ அ-

புதுச்சேரி

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்-சமூகஅமைப்பினர் ஊர்வலமாக சென்று மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டு சென்ற பழைய மின்சாதனங்களை உடைத்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 1 முதல் 100 வரையிலான யூனிட்டுக்கு ரூ. 1.30( பழைய கட்டணம் 1.10), 101 முதல் 200 வரையிலான யூனிட்டுக்கு ரூ. 2.25(பழைய கட்டணம் 1.75), 201 முதல் 300 வரையிலான யூனிட்டுக்கு ரூ. 3.95(பழைய கட்டணம் 3.50), 300க்கு மேல் ரூ. 5.10(பழைய கட்டணம் 4.60) உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடைமுறைக்கு வந்தது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் , பொதுமக்கள், சமூக அமைப்பினர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டனர். இப்போராட்டத்திற்கு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்க, தலைவர் லெனின் முன்னிலைவகித்தார்.

பின்பு புதுச்சேரி அண்ணாசிலையிலிருந்து பழைய மின்சாதன பொருட்களை தட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து ஊர்வலமாக சோனாம்பாளையத்தில் உள்ள தலைமை மின்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய பொதுமக்கள், தாங்கள் கொண்டு வந்த வாஷிங்மெஷின், மிக்ஸி, டிவி, கிரைண்டர், டியூப் லைட்களை மின்துறை அலுவலகத்திற்குள் தூக்கி போட்டு உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக ஒரு மணி நேரம் மின்துறை அலுவலகத்தில், கட்டணம் செலுத்த வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:

மின்துறையானது அரசுத்துறைகள், தெழில் அதிபர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பாக்கி ரூ.300 கோடி, மின் இழப்பு, திருட்டு, மின்துறைக்கு வாங்கப்படும் பொருட்களில் நடைபெறும் முறைகேடுகளால் ஏற்படும் நஷ்டம் ஆகிய அனைத்தையும் நுகர்வோர் தலையில் திணிக்கின்றனர். தற்போது மின்கட்டணம் உயர்த்தப்ப்டடுள்ளது.

அதிகப்படியான மின் கட்டண உயர்வால் நுகர்வோர் எதிர்காலத்தில் கடன்காரர்களாகவும் மாறிவிடுவர் என்பதை தெரிவிக்கும் வகையில் மின்பயன்பாடு பெருட்களான ஏ.சி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, மின்விசிறி உள்ளிட்ட பெருட்களை மின்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் ஊர்வலமாக வந்தோம். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மின் பொருட்களை அலுவலக வாயிலில் உடைத்தோம் என்று தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close