[X] Close
 

கமல் பேசுவது யாருக்கும் புரியவில்லை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கிண்டல்


சிவகாசி ரத்தினம் நகரில் ரூ.5 கோடியில் கட்டப்படவுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடத்துக்கான பூமிபூஜையைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அருகில், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் உள்ளிட்டோர்.

  • kamadenu
  • Posted: 06 Apr, 2018 12:56 pm
  • அ+ அ-

கமல் பேசுவது யாருக்கும் புரியவில்லை. வசனம் எழுதிக்கொடுத்தால் மட்டுமே கமலால் நன்றாக பேசமுடியும். என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரத்தினம் நகரில் ரூ.5 கோடியில் நகராட்சி அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி பங்கேற்றார். கீழத்திருத்தங்கல் கிராமத்தில் 20 துப்புரவுப் பணியாளா்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புக் கட்டிடங்களுக்கான உத்தரவுகளை அமைச்சா் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கமல் பேசுவது யாருக்கும் புரியவில்லை. வசனம் எழுதிக்கொடுத்தால் மட்டுமே கமலால் நன்றாக பேசமுடியும். அவரை நினைத்து நாங்கள் வேதனைப்படுகிறோம். ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து எதுவும் தெரியாமல், போராட்டத்தில் கலந்து கொண்டு வந்துள்ளார். ரயில் இப்படிதான் இருக்குமா என்று அவர் கேட்டது நகைப்புக்குரியதாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. எங்கள் போராட்டத்தை தொடர்ந்து குழு அமைத்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் மக்களை பாதிக்காத வகையில் நடைபெற்றுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close