[X] Close

தேசியக் கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை: சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை


national-flag-issue

  • kamadenu
  • Posted: 05 Apr, 2018 20:28 pm
  • அ+ அ-

தேசியக் கொடியை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பொது இடத்தில் அல்லது வேறு இடத்தில் பொதுமக்களின் பார்வையில் தேசியக் கொடி அல்லது இந்திய அரசமைப்புச் சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த ஒரு பகுதியை வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ எரிக்கிற, சிதைக்கிற, தோற்றத்தைக் கெடுக்கிற, மாசுபடுத்துகிற, உருக்குலைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது பிற வகையில் அவமதித்தல், புறக்கணித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவர். 

தேசிய, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் காகிதத்தலான கொடிகளை தரையில் போடக்கூடாது அல்லது தரையில் தூக்கியெறியக்கூடாது. தேசியக் கொடியை உரிய கண்ணியத்துடன் தனியாக தீர்வு செய்ய வேண்டும்'' என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close