[X] Close

வலுத்த எதிர்ப்பு: தயாரிப்பாளர்கள் குறித்த ட்வீட்டை டெலீட் செய்த சந்தோஷ் சிவன்


santosh-sivan-tweet-deleted

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 15:11 pm
  • அ+ அ-

தயாரிப்பாளர்கள் குறித்த தனது ட்வீட்டுக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அதனை டெலீட் செய்துவிட்டார் சந்தோஷ் சிவன்.

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர்கள் குறித்து புகைப்பட வடிவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் ஒரு நாய்க்குட்டியின் இரு வெவ்வேறு முக பாவனைகள் கொண்ட புகைப்படங்களை மெர்ஜ் செய்து ஒரு ட்வீட்போட்டிருக்கிறார். அதில் பல் தெரியும்படி ஆவேசமாக இருக்கும் நாய்க்குட்டிக்கு மேலே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்கள் மனோபாவம் என்றும். மற்றொரு நாய்க்குட்டியின் மேல் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது தயாரிப்பாளர்களின் முகம் இப்படி இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.

முன்னணி ஒளிப்பதிவாளரே இப்படி கூறியிருந்தது, பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய கடும் கண்டத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் குறித்த தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார் சந்தோஷ் சிவன். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் மாலையில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில் சந்தோஷ் சிவனுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்கவும் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close