[X] Close

நிமிடக்கதை: தலையாய பிரச்சினை


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 28 Aug, 2018 12:09 pm
  • அ+ அ-

 

கடிகார முட்கள் கால் முளைத்து வந்து இடுப்பில் குத்திச்சொன்ன செய்தி, நேரம் ஆகிவிட்டது. சீக்கிரம் கிளம்பு என்றது.
ஆனால் முடியாது.

இன்னும் தலை வாரி முடியவில்லை.
சீப்பை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வாரினாள்.
”மா... உன் கோபத்தை என் தலையில் காட்டாதே. முடியலியா., கிளம்பிப் போ, நானே பார்த்துக்குறேன்.....”
காதுகளில் மாட்டிய ஹெட் போன் வழி ...வழிந்துகொண்டிருந்த
இசைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, .அதை காதிலிருந்து பிடுங்கிப் போட்டாள். இசைக்கு ஏற்ற ஆட்டங்கள் கொடுத்தபடி இருந்த தலை இப்போது ஆடாமல் நின்றது.
”அதை ஏன் எடுத்த....??” குரலில் வழிந்தது கோபம்.

”அய்யே... என்ன சிடுக்கு.. எங்கே போய் உருண்டுட்டு வர்றியோ... கையே விட்டுப்போகுது’’

கண்களுக்குத் தெரிந்த இரண்டு வெள்ளை முடிகளை படக்கிட்டாள்.
”வலிக்குது... விடு...அதுபாட்டுக்கு இருக்கட்டும், அதை ஏன் பிடுங்கற...?”
”கழுதைக்கு ஆகிற வயசு... கல்யாணம் இன்னும் ஆகவில்லை... அதற்குள் வெள்ளை முடி.... வெளியே தெரிஞ்சா... கல்யாணம்....எப்ப நடக்கும்...??”
குரலில் ஏகத்திற்கு பயத்தை வழியவிட்டாள்.
பயம் அதிகமாகும்படி, காதோரம் ... முடியில் வெள்ளை வெள்ளையாக பேன் முட்டைகள்...
அடக் கடவுளே... யார் தலையில் இருந்து வந்திருக்கக்கூடும்...?

நேற்று வாரியபோது கூட பார்க்கவில்லையே. நேரம் கிடைக்கும்போது,  இதைச் சரி செய்ய வேண்டும். இந்த பேனைக் கொடுத்தது காதலா இருக்குமோ? அட இதற்கு ஏன் கவலை. பிடித்திருந்தால் சரி. கவலை விட்டது. என்ன ... இரண்டு தலைகளுக்கு பேன் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.

இப்போது...??

நேரத்தைப்பார்த்தாள்.
இன்று முடியாது. நேரமாகிவிட்டது. வாரிமுடித்த தலையில் பேண்ட் போட்டுவிட்டுப் பார்த்தாள்.  ஒரு கற்றை முடி காதில் போட்டிருந்த சின்ன வைரப்பொட்டில் மாற்றியபடி வெறுப்பேற்றியது.

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்... இந்த தலை வாரல் வேலையாவது இல்லாதிருக்கும்...

தன் பாப் தலை சிலும்ப அவசரமாக ஆபீஸ் கிளம்பினாள்... தலை வாரி ரப்பர் பாண்ட் இட்ட மகனிடம் சொல்லிக்கொண்டு !

 - லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close