[X] Close

'பாகிஸ்தானுக்காக பீல்டிங் செய்த சச்சின்': இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன் நடந்த சுவாரஸ்யம்


interest-incident-about-sachin

சச்சின் டெண்டுல்கர்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 17 Nov, 2018 09:47 am
  • அ+ அ-

இந்திய அணிக்குள் கடந்த 1989-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அறிமுகமாகும் முன், பாகிஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய பீல்டிங் செய்துள்ள ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கியில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.

சச்சின் தனது 16-வயதில் கடந்த 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்று களமிறங்கினார் என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த விஷயம். ஆனால், அதற்கு முன்பே சச்சின் பாகிஸ்தானுக்காக சச்சின் பீல்டிங் செய்துள்ளது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சச்சின் டெண்டுல்கருக்கு 14வயதாக இருக்கும் போது,அதாவது கடந்த 1987-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியா பயணம் மேற்கொண்டிருந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருந்தது. அப்போது, இந்தியகிரிக்கெட் வாரியத்தின் பொன்விழா ஆண்டு என்பதால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஜனவரி 20-ம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது.

அந்த போட்டி 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த கண்காட்சி போட்டி நடக்கும் போது சச்சின் டெண்டுல்கருக்கு 13வயது 8 மாதங்கள் ஆகி இருந்தது. அப்போதுதான் சச்சின் டெண்டுல்கருக்கு பாகிஸ்தானுக்காக பீல்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பிசிசிஐ அமைப்பில் நடுவராக இருப்பவரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான மார்கஸ் கூட்டோ அந்த சுவாரஸ்ய சம்பவத்தை விளக்கினார். அவர் கூறியதாவது:

போட்டி நடந்து கொண்டு இருந்தது, அப்போது பாகிஸ்தானிய வீரர்கள் சிலர் திடீரென ஓய்வெடுக்க அறைக்குச்சென்றுவிட்டனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான்கான், இந்திய அணியின் கேப்டன் ஹேமந்த் கேங்கரேயிடம் வந்து பீல்டிங் செய்ய இரு வீரர்கள்குறைகிறார்கள், எங்கள் 4 வீரர்கள் ஓய்வறைக்கு சென்று இருக்கிறார்கள். சில வீரர்களை ஏற்பாடு செய்து தரமுடியுமா எனக் கேட்டார்.

அப்போது, இதைக் கேட்ட சச்சின் இந்தியக் கேப்டன் ஹேமந்தைப் பார்த்து மராத்தியில் நான் பீல்டிங் செய்யட்டுமா என்று கேட்டார். ஹேமந்த் சரி சொல்வதற்குமுன் களத்தில்இறங்கிவி்ட்டார் சச்சின். ஆனால், சச்சினையும், குஸ்ரு என்ற வீரரையும் பாகிஸ்தானுக்காக பீல்டிங் செய்ய அனுப்பிவைக்கப்பட்டனர்.

சச்சின் டெண்டுல்கரை பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய வைத்தனர். ஏறக்குறைய பாகிஸ்தான் அணிக்காக 30 நிமிடங்கள் வரை சச்சின் பீல்டிங் செய்தார். என்னைப் பொறுத்தவரை சச்சின் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி அதுதான்.

ஆனால், தன்னை பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய வைத்தது சச்சினுக்கு பிடிக்கவில்லை. போட்டி முடிந்து ரயிலில் வீடு திரும்பும் போது, என்னை பவுண்டரியில் பீல்டிங் செய்ய வைத்துவிட்டார்கள். லெக்திசையில் டீப் மிட்விக்கெட்டில் நிறுத்தி இருக்கலாம். தொலைவில் நிறுத்தியதால்தான் ஓடிவந்து கேட்ச்பிடிக்க முடியவில்லை என வேதனைப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 189 ரன்கள் சேர்த்து. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அசாரூதீன் 80ரன்கலும், ரோஜர் பின்னி 63 ரன்களும் சேர்த்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close