[X] Close

அரசியல் கருத்துகளை பாக். கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கக்கூடாது: ஜாவிட் மியான்தத் அறிவுரை


javind-interview-about-pakistan

  • kamadenu
  • Posted: 17 Nov, 2018 09:44 am
  • அ+ அ-

இரு நாடுகள் தொடர்பான அரசியல் விஷயங்கள், கருத்துகளை கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கக்கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறினார்.

2 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் விவகாரம் குறித்து முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்திருந்தார். காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் சொந்தம் கொண்டாடக்கூடாது. அந்த நாடை தனி நாடாக அறிவிக்கவேண்டும். பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களையே நிர்வகிக்கத் திணறும்போது பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை என்று அப்ரிடி கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தனது கருத்தை இந்திய ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாக அப்ரிடி மறுப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “நான் சொன்ன கருத்தில் சிலவற்றை இந்திய ஊடகங்கள் விட்டுவிட்டன. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று நான் கூறியிருந்தேன்” என்றார்.

இந்த நிலையில் அரசியல் தொடர்பான கருத்துகளை கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கவேண்டாம் என்று ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கராச்சியில் அவர் மேலும் கூறும்போது, "காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடி பேசியது உகந்ததாக இல்லை அவர் இதை தவிர்த்திருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற அரசியல் கருத்துகளை பேசக்கூடாது. அவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டும்.” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close