[X] Close

விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி


indian-team-leaves-australia

விராட் கோலி | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 17 Nov, 2018 09:40 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று புறப்பட்டுச் சென்றது.

ஆஸ்திரேலியாவில் 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக நேற்று கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர்.

பயணத்துக்கு முன்னதாக இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் ட்விட்டரில் கூறும்போது, “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பது தெரியும். இந்த சவாலை உற்சாகத்துடன் நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம். அணி வீரர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடுவது சுகமான அனுபவம்” என்றார்.

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, கிருணல் பாண்டியா உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய பயணம் குறித்து ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான சவால் காத்திருக்கிறது. எனவே இந்திய வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடவேண்டும். தொடரை வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கு களமிறங்கவேண்டும்” என்றார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close