[X] Close

'எதையும் நாங்களாக ஆரம்பிக்கமாட்டோம்': ‘ஸ்லெட்ஜிங்’ குறித்து விராட் கோலி சூசகம்: ஆஸி. புறப்பட்டது இந்திய அணி


virat-kohli-interview-about-australia-tour

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி: படம்உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 08:24 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி சீரமைக்கப்பட்டு வருவதால், வீரர்களுக்கு இடையே ஸ்லெட்ஜிங் இருக்காது என நம்புகிறேன். எந்தவிதமான வாக்குவாதமும் இன்றி மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் என எதிர்பார்க்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, 4 போட்டிகள் டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் இருந்து கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.

அதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது விராட் கோலி  கூறியதாவது:

''ஆஸ்திரேலிய அணி ஒரு சில கசப்பான சம்பவங்களுக்குப் பின் தற்போது மிகப்பெரிய அளவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆதலால், வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது இருக்காது என்று நம்புகிறேன். மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் எந்தவிதமான வாக்குவாதமும் சண்டையும் இல்லாமல் விளையாடுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. அவ்வாறு ஸ்லெட்ஜிங் அல்லது சண்டை ஏற்பட்டால், அதை வீரர்கள் உற்சாகத்துடன் ஏற்பார்கள்.

நான் ஒரு நேரத்தில் ஆவேசமான குணம் உள்ள வீரராகத் தோற்றமளித்தேன். ஆனால், தற்போது தனிப்பட்ட முறையில் அதிகமான முதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்கு அதிகமான பொறுப்புகள் இருப்பதை நம்புகிறேன். தொடக்கத்தில் முதிர்ச்சி அடையாத விஷயங்களுக்காக நான் வருத்தப்பட்டது எல்லாம் இனிமேல் இருக்காது. எந்தவிதமான காரணமும் இன்று என்னால் உற்சாகமாக விளையாட முடியும். அணியின் கேப்டனாக இருப்பதால், எந்த விஷயத்துக்கும் தனியாகச் சந்திக்க முடியாது. அணிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டும்தான் சிந்திக்க முடியும்.

எங்கள் அணியைப் பொறுத்தவரை எந்த விஷயத்தையும் நாங்களாகத் தொடங்கியதில்லை. சூழ்நிலைக்கு மட்டுமே எதிர்வினையாற்றினோம்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா கூறுகையில், ''கடந்த பயணத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்லெட்ஜிங் செய்ததுபோல் இந்த முறை இருந்தாலும் அது குறித்து கவலைப்படப் போவதில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் செய்வதைப் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் நட்பாகத்தான் இருப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அங்கே போனால், நிச்சயம் கடினமான சூழல் இருக்கும்.உங்கள் நாட்டுக்காக நீங்கள் விளையாடும்போது, யாரும் எளிதாக ரன்களையும், விக்கெட்டுகளையும் விட்டுத்தர மாட்டார்கள். கடினமான விளையாட்டில் கடினமாகத்தான் போராடி சவால்களை எதிர்கொள்ள முடியும்'' எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close