[X] Close

மீண்டும் வருகிறார் வார்னர்: சன் ரைசர்ஸ் அணியில் 9 வீரர்கள் நீக்கம்; 17 பேர் தக்கவைப்பு


sun-raisers-team-for-ipl-2019

டேவிட் வார்னர், ஷிகர் தவண், விர்த்திமான் சஹா: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 08:21 am
  • அ+ அ-

2019-ம்ஆண்டு ஐபிஎல் சீசனுக்குத் தயாராகும் வகையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான டேவிட் வார்னரைத் தக்கவைத்துள்ளது. அதேசமயம், 9 வீரர்களை நீக்கியுள்ளது.

கடந்த ஆண்டு சீசனின் போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் தான்அணியில் இருந்து விலகிக் கொள்வதாக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்திடம் டேவிட் வார்னர் தெரிவித்தார். அதற்குப் பதிலாக வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அடுத்த சீசனுக்கு வார்னர் திரும்புவதால், அவரிடமே கேப்டன் பொறுப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்காக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் 17 பேரைத் தக்கவைத்துள்ளது. 9 பேரை நீக்கியுள்ளது. அதில் முக்கியமானவர் ஷிகர் தவண். இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.

மற்றொரு முக்கிய வீரரும், விக்கெட் கீப்பருமான விர்த்திமான் சஹாவை சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. கடந்த சீசனில் காயம் அடைந்த சஹா இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. ஆதலால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும், அயல்நாட்டு வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராத்வெய்ட், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய வீரர் ஷிகர் தவணை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வழங்கிவிட்டு, அதற்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், அபிஷேக் சர்மாஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் தங்களின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள், மாற்றப்பட்ட வீரர்கள் ஆகியோரின் விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

பாசில் தம்பி, புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா, மணிஷ் பாண்டே, நடராஜன், ரிக்கி புகி, சந்தீப் சர்மா, கோசாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, யூசுப் பதான், ஸ்டான்லேக், டேவிட் வார்னர், கானே வில்லியம்ஸன், முகமது நபி, ரஷித் கான், சஹிப் அல்ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷாபாஸ் நதீம்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

சச்சின் பே, தன்மே அகர்வால், விர்த்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டான், பிராத்வெய்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் சர்மா, சயது மெஹதி ஹசன், ஷிகர் தவண்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close