[X] Close

மீண்டும் சிஎஸ்கே ஆடை: டேவிட் வில்லே மகிழ்ச்சி


david-ville-by-csk-team

டேவிட் வில்லே

  • kamadenu
  • Posted: 15 Nov, 2018 18:32 pm
  • அ+ அ-

மீண்டும் சிஎஸ்கே ஆடையை அணிய ஆவலாக உள்ளேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளது குறித்து டேவிட் வில்லே தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து வில்லே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''சென்னை அணிக்குத் திரும்பியது குறித்து மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன். சிறப்பான முறையில் வீரர்களுக்கு ஆதரவளிக்கும் சிறந்த அணி.  மீண்டும் சிஸ்கே ஆடையை அணிய ஆவலாக உள்ளேன்'' என்றார்.

2019-ம் ஆண்டு 12-வது ஐபிஎல் சீசன் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு பிற வீரர்களைக் கழற்றிவிட முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் புதிய வீரர்கள் தேர்வு நடைபெறும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்குத் தயாராகும் வகையில் 3 வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது. 22 வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

இதன்படி கடந்த சீசனில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது. இதில் மார்க் வூட் கடந்த சீசனில் ஒருபோட்டியில் மட்டும் விளையாடினார். அதில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்தார். அதேசமயம், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோருக்கு ஒருபோட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கேவின் 22 வீரர்கள் விவரம்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்ளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close