[X] Close

ஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்த,கழற்றிவிடப்பட்ட வீரர்கள் யார் யார்?


csk-team-for-2019-ipl

  • kamadenu
  • Posted: 15 Nov, 2018 08:31 am
  • அ+ அ-

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல வீரர்களைத் தக்கவைத்துள்ளது, சில வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு 12-வது ஐபிஎல் சீசன் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு பிற வீரர்களைக் கழற்றிவிட முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் புதிய வீரர்கள் தேர்வு நடைபெறும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில் 3 வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது, 22 வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

இதன்படி கடந்த சீசனில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது. இதில் மார்க் வூட் கடந்த சீசனில் ஒருபோட்டியில் மட்டும் விளையாடினார். அதில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்தார். அதேசமயம், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோருக்கு ஒருபோட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற கேதார் ஜாதவ் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி சேர்க்கப்பட்டார். அடுத்த சீசனுக்கு இருவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், முக்கிய வீரர்களான கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து வீரர் மிட்ஷெல் சான்ட்னர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரை மீண்டும் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

அணியில் இருந்து விலகிக்கொள்ளப்பட்ட மார்க் வூட், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோருக்கு சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் கழற்றிவிட்டதால், ரூ.8.5 கோடிவரை கையிருப்பு உள்ளது.

தக்கவைக்கப்பட்ட 22 வீரர்கள்விவரம்:

எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close