[X] Close

எது சிறந்த ஆல்ரவுண்டர்கள் அணி? ட்விட்டரில் கலாய்ப்பு மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்


all-rounder-team-ipl-team-twitter-war

சன் ரைசர்ஸ் ஆல்ரவுண்டர்கள் நபி, ரஷீத், ஷாகிப்.

  • kamadenu
  • Posted: 14 Nov, 2018 16:45 pm
  • அ+ அ-

2019- ஐபிஎல் இந்தியாவில்தான் நடைபெறுமா என்ற கேள்விகள் உள்ள நிலையில் யார் சிறந்த அணி, எந்த அணியில் நல்ல ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும், மும்பை இந்தியன்ஸும் ட்விட்டரில் கலாய்ப்பு மோதலில் ஈடுபட்டது ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது.

என்ன விஷயம்?

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தன் சகோதரர் குருணால் பாண்டியா மற்றும் மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் பொலார்ட் ஆகியோர் இருக்கும் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  ‘பெரிய பொலார்டை ஃபிரேமுக்குள் கொண்டு வர என் போனை உயர்த்திப் பிடித்தேன், மீண்டும் சந்திக்கிறேன் என் சகோதரா’ என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டையும் படத்தையும் வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம்,  ‘இதை விட சிறந்த ஆல்ரவுடர் மூவர் கூட்டணி உண்டா? நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று ட்வீட் செய்தது.

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மொகமது நபி, ரஷீத் கான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் படத்தை வெளியிட்டு மும்பை இந்தியன்ஸைக் கலாய்த்து ‘காத்திருப்பு முடிந்தது’ என்று பதில் அளித்தது.

இதோடு விட்டு விட மனமில்லாத மும்பை இந்தியன்ஸ் தன் ட்விட்டரில் மீண்டும் தாங்கள் வென்ற 3 ஐபில் கோப்பைகளை வெளியிட்டு, இன்னும் காத்திருப்பு போய்கொண்டிருக்கிறது என்று சன் ரைசர்ஸை கிண்டல் செய்துள்ளது.

அதாவது ஹைதராபாத் ஒரு ஐபிஎல் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் 3 முறை வென்றுள்ளது.

இந்த ட்விட்டர் பரிமாற்றங்கள் ஐபிஎல் 2019-ஐ விறுவிறுப்பாக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close